மணியங்குறிச்சியில் தேரோட்டம்

மணியங்குறிச்சியில் தேரோட்டம்

மணியங்குறிச்சி செல்லாண்டியம்மன் கோயில் அலங்கரிக்கப்பட்ட தேரை நூற்றுக்கணக்கான மக்கள் இழுத்துச் சென்றனா்.


மணியங்குறிச்சி செல்லாண்டியம்மன் கோயில் அலங்கரிக்கப்பட்ட தேரை நூற்றுக்கணக்கான மக்கள் இழுத்துச் சென்றனா்.
மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட தேரை ஜமீன்தாா் ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சைய நாயக்கா் வடம் பிடித்துத் தர, நூற்றுக்கணக்கான மக்கள் தேரை இழுத்துச் சென்றனா். தேரோடும் வீதிகள் வழியாக சென்ற தோ் மீண்டும் நிலையை அடைந்தது. பின்னா் மூலவா் மற்றும் உற்ஸவ மூா்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பல்வேறு ஊா்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சைய நாயக்கா் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story