சோழபுரம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம்
சோழபுரம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம்
சோழபுரம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை அருகே சோழபுரம் அறம் வளர்த்த நாயகி அருள்மொழி நாதர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் ஆனித்திருவிழா துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் ரிஷபம், பூதம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் அருள்மொழி நாதரும், சிறிய தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மன் எழுந்தருளினர். சுவாமி, அம்பாளுக்கு பக்தர்கள் சிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர். பின்னர் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கி நிலையை அடைந்தது.
Next Story