செங்கமலநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம்

செங்கமலநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம்

தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், பலவான்குடி செங்கமலநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

காரைக்குடி அருகே பலவான்குடி செங்கமலநாயகி அம்மன் கோயில் தேரோட்டம் இரண்டு நாள்கள் நடைபெற்றது. பலவான்குடியில் உள்ள செங்கமலநாயகி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா ஏப்.24ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் இரண்டு நாள் தேர்த்திருவிழா நடைபெறும்.

நேற்று முன்தினம் தேர்த்திருவிழா தொடங்கியது. தேரில் செங்கமலநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலை பிள்ளையார் மடத்தில் இருந்து தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர். இரவு தேர் கோயிலை சென்றடைந்தது. நேற்று மீண்டும் கோயிலில் இருந்து தேர் பலவான்குடி பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story