சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தேரோட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தேரோட்டம் துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று காலை 4 மணிக்கு கங்காளநாதர் பிக்க்ஷாடனராக திருவீதி விழா நடந்தது.
காலை 8:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களில் விநாயகர் சுவாமி, அம்பாள் மற்றும் அம்மன் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது.
நிகழ்ச்சியை குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயருமான மகேஷ் கலந்து கொண்டு திருத்தேர் வடம் இழுக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Tags
Next Story