சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய நான்கு மாதங்களில் 10 நாட்கள் விமர்சியாக திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் திருமுறைபாராயணம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தினமும் தேவார இன்னிசை, சாமி வாகனத்தில் தினசரி பவனி வருதல் போன்றவை நடைபெற்றது.
ஒன்பதாவது நாள் திருவிழாவான இன்று தேர்திருவிழா நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் இழுக்கப்பட்டது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், இந்திரன் தேர் ஆகியனவ ரத வீதியை சுற்று காலை 10.30-க்கு தேர் நிலை நின்றது. இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண நிகழ்சி நடைபெறுகிறது விழாவில் நிறைவு நாளான நாளை 17ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்தில் சாமி அம்மாள் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து தெப்பத் திருவிழா நடைபெறும் அன்று நள்ளிரவே ஆராட்டு நிகழ்ச்சியோடு பத்து நாள் சித்திரை தெப்பத் திருவிழா நிறைவு பெறுகிறது.