திருக்கோளக்குடியில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருக்கோளக்குடியில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோளக்குடியில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருக்கோளக்குடியில் புராதன சிறப்பு மிக்க குடவரைக்கோயில் திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயில் மலைக்குன்றில் மூன்று அடுக்காக அமைந்துள்ளது. இக்கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்து திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு தேர்களில் சுவாமி எழுந்தருளல் நடந்தது. முதல் தேரில் விநாயகர், சண்டிகேஸ்வரர், இரண்டாவது தேரில் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, 3 வது தேரில் திருக்கோளநாதர், 4 வது தேரில் ஆத்மநாயகி அம்மன் எழுந்தருளினர். பின்னர் தேர்காலிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது

Tags

Next Story