சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை ஒட்டி குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாளை 27 ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று காலை 4 மணிக்கு கங்காளநாதர் பிக்க்ஷாடனராக திருவீதி விழா நடந்தது. காலை 8:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களில் விநாயகர் சுவாமி, அம்பாள் மற்றும் அம்மன் தேரில் அலங்கார கோரத்தில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், இரவு 12 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி விழா போன்றவை நடக்கிறது. இரவு 12 மணிக்கு மக்கள்மார் சந்திப்புக்காக வந்த கோட்டாறு வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி, மருங்கூர் சுப்பிரமணியசுவாமி ஆகியோர் தங்களது தாய் தந்தையரை பிரிந்து செல்லும் சப்தவர்ணம் நடக்கிறது. இந்த காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருப்பர். தேரோட்டத்தை ஒட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை 27ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், இரவு 9 மணிக்கு மூலவருக்கு அலங்கார அபிஷேகம், அதைத் தொடர்ந்து திரு ஆறாட்டுடன் மார்கழி மாத திருவிழா நடைபெறுகிறது.

Tags

Next Story