விராலிமலையில் இன்று தேரோட்டம்

விராலிமலையில் இன்று தேரோட்டம்

தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.

விராலிமலையில் மலை குன்றின் மீது அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச வைகாசி விசாகம், கந்த சஷ்டி பெருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பாண்டு காண தைப்பூச திருவிழா கடந்த 16ஆம் தேதி காலை தொடங்கியது.

சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் சேவல், மயில், ஓம் பொறித்த கொடியேற்றி வைத்து ரக்ஷாபந்தனன் என்ற காப்பு கட்டினர். தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என்று இரு வேலைகளிலும் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள வீதி உலா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று 24ஆம் தேதி நடக்கிறது.

நாளை இரவு தெப்பர்சவம் நடக்கிறது 26 ஆம் தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறுவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், சிவாச்சாரியார்கள், மண்டக படித்தார்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags

Next Story