தென்காசி காசிவிசுவநாத திருக்கோவிலில் நாளை தேரோட்டம்

தென்காசி காசிவிசுவநாத திருக்கோவிலில் நாளை தேரோட்டம்
தென்காசி காசி விசுவநாத திருக்கோவில் 
தென்காசியில் நாளை சுவாமி அம்பாள் திருதேரோட்டம் நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் மாசி மக திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவில் விழாவில் தினமும் காலை இரவு நேரங்களில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது.

இதில் சப்பரங்களில் சுவாமி அம்பாள் எழுந்தருளி ரத வீதி வழியாக உலாவும் நடந்து வருகிறது. இந்த சிகர நிகழ்ச்சியான காசி விசுவநாதர் திருக்கோவில் விழாவில் நாளை 23-ம் தேதி சுவாமி அம்பாள் திரு தேரோட்டம் நடைபெறுகிறது. கோவில் வாசல் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட தேர் அலங்கரிக்கப்பணி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story