கொணலவாடியில் அய்யனார் கரும்பியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

கொணலவாடியில் அய்யனார் கரும்பியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்


கொணலவாடியில் பழமை வாய்ந்த அய்யனார் கரும்பியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.


கொணலவாடியில் பழமை வாய்ந்த அய்யனார் கரும்பியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.

கொணலவாடியில் பழமை வாய்ந்த அய்யனார் கரும்பியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முந்திய அய்யனார் கரும்பியம்மன் கோவில் உள்ளது. கோவில் தேர் பழுதடைந்ததால், அதனை சீரமைத்து புதுப்பிக்க அப்பகுதி மக்கள் முயற்சித்தனர்.

இதற்காக ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் தேர் புதுபிக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நேற்று மதியம் 2 மணி அளவில் நடந்தது. அப்போது சிறப்பு பூஜைகள், தீபாராதனை வழிபாடுகளுடன் தேர் வெள்ளோட்டடம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

Tags

Next Story