திருக்கோவிலூரில் தேர் வெள்ளோட்டம்
தேர் வெள்ளோட்டம்
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் தேர் சக்கரங்கள் மாற்றப்பட்டிருப்பதால் இன்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் தேர் சக்கரங்கள் மாற்றப்பட்டிருப்பதால் இன்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். நாளை 17ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இந்நிலையில் கோவில் தேருக்கான சக்கரங்கள் பழுதடைந்ததால் என்.எல்.சி., நிறுவனத்தின் சார்பில் புதிதாக இரும்பு சக்கரங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி, இன்று 16ம் தேதி காலை 8:00 மணிக்கு தேர் வெள்ளோட்டம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
Next Story