ராக்கிப்பட்டி சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம்
தேர்த்திருவிழா
ராக்கிப்பட்டி சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ராக்கிப்பட்டி சென்றாய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முதலில் சிறிய தேரில் ஆஞ்சநேயரும், பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தேரும் புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர், கம்மங்கூழ், அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) வாணவேடிக்கையுடன் சத்தாபரணம் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சல் உற்சவத்துடன் சாமி மலை ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்று திருவிழா முடிவடைகிறது.
Next Story