சேலம் பார்வையற்றோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம் பார்வையற்றோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம் பார்வையற்றோர் பள்ளிக்கு நலதிட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது

சேலம் பார்வையற்றோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது
நடிகர் ரஜினிகாந்தின் 73- வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கேக் வெட்டியும், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கோவில்களில் சிறப்புபூஜை செய்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள பார்வை இழந்தோர் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் பாரத சேவா அமைப்பு சார்பில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு விழியிழந்தோர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினார். முன்னதாக பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளை ரசிகர்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்செல்வி, ரமேஷ், பாபு, ஜெகநாதன் பெரியதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுக்கம்பட்டி பிரபு செய்திருந்தார்.

Tags

Next Story