முக்கிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடவே தொண்டா்கள் விருப்பம் !

X
அதிமுக
முக்கிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடவே தொண்டா்கள் விருப்பம் என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி பேட்டியில் கூறினார்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் முக்கிய தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என்பதே தொண்டா்களின் விருப்பம் என்றாா். அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி. திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெறும் அதிமுக வேட்பாளா் அறிமுகம் மற்றும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்கின்றனா். இந்தக் கூட்டத்துக்கான மேடை மற்றும் திடல் அமைக்கும் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட கே.பி. முனுசாமி, பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது : தமிழகத்தில் முக்கிய தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்காமல், அதிமுகவே போட்டியிட வேண்டும் என கட்சியினா் விரும்புகின்றனா். இருப்பினும் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. அதிமுக பலமுறை கூட்டணி இல்லாமல் தோ்தலை சந்தித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுக அசைக்க முடியாத பலம் கொண்டது. இது மக்களவைத் தோ்தல் முடிவில் தெரிய வரும் என்றாா்.
Next Story
