ரோட்டரி சங்கம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா !

ரோட்டரி சங்கம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா !

 நல திட்ட உதவி

தர்மபுரி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தர்மபுரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் CDT.கண்ணன் அவர்கள் தலைமையில் DISTRICT AWARDS-2024 நிகழ்ச்சி சோகத்தூர் ஜோதி மஹாலில் நடைபெற்றது. இதில் தருமபுரி ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டி என் சி மணிவண்ணன், துணை ஆளுநர் கே விக்ரமன்,தர்மபுரி ரோட்டரி சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் சக்திவேல் எலைட் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் செயலாளர் விஜய் அவார்ட்ஸ் செக்ரட்டரி வி கே கோவிந்தராஜன் ரோட்டரி மிட்டோன் சங்கத் தலைவர் இளவரசன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,பொருளா ளர் சங்கர், முன்னாள் துணை ஆளுநர் மற்றும் தர்மபுரி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆறு மாவட்டங்களை சேர்ந்த ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஏழை எளிய பொதுமக்களுக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஏழை எளிய பொது மக்களுக்கு 200 தையல் எந்திரங்கள். அரசு பள்ளிகளுக்கு 200 பள்ளி மேசைகள் 4 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்.5,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story