சட்ட மாமேதை அம்பேத்கர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் விழா
சட்ட மாமேதை அம்பேத்கர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் விழா.
சட்ட மாமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தஞ்சை மாவட்டக் குழுவின் சார்பில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், பி.செந்தில்குமார், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.அபிமன்னன், என்.குருசாமி, எம்.வடிவேலன், இ.வசந்தி, செல்வராஜ், களப்பிரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் என்.சிவகுரு, மாவட்டப் பொருளாளர் பி.சத்தியநாதன், காப்பீட்டுக் கழக ஓய்வூதியர் சங்கம் ஆர்.புண்ணியமூர்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அரசியல் சாசன சட்டத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. பட்டுக்கோட்டை தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மணிக்கூண்டு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிலைக்கும், தமுஎகச கிளைச் செயலாளர் மோரிஸ் அண்ணாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, தமுஎகச கிளைப் பொருளாளர் பக்கிரிசாமி, துணைச் செயலாளர் மருத்துவர் வீரமணி, ஞானசூரியன், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பேராவூரணி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் உருவாச்சிலைக்கு சிபிஎம், சிபிஐ, திமுக, மதிமுக, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story