ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசு - வைகோ
மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புது சென்னாகுளம் பகுதியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி நாயுடு அறக்கட்டளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு ரூ.450 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஆனால், ரூ. 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய் வைத்துக் கொண்டும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் சுண்ணாம்பை வைக்கும் செயலில் ஈடுபடுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து 15 நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்ததற்கு. அது ஒரு நாளும் நடக்காது அது மக்களை துண்டு துண்டாக்கும் முயற்சி எனவும் இந்தியா கூட்டணியில் புதிதாக கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு அது குறித்து எனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
Next Story