தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை

தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக கொடைக்கானல் தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக கொடைக்கானல் தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலையுடன் தமிழகத்தில் அனைத்து கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது, இதனை தொடர்ந்து சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் டிப்போ பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கியுள்ளார்களா, வெளி மாநிலம் மற்றும் வெளி ஊர்களை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளார்களா, தங்குவதற்கு முறையான ஆவணங்கள் வைத்துள்ளார்களா, பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகள் வருகை பதிவேடு இல்லாமல் இருந்தால் தங்கும் விடுதி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆதார், ஓட்டுநர் அடையாள அட்டை உள்ளிட்ட முறையான ஆவணங்களின் நகல்களை பெற்றுக்கொண்டு அறை (ரூம்கள்) வாடகைக்கு கொடுக்க வேண்டும் எனவும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கும் விடுதிக்கு வந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர், இந்த சோதனையில் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story