திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்
சாலையை கடக்கும் சிறுத்தை
சத்தி அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவில் சிறுத்தை நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
சத்தி புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் இரை தேடி நடமாடுவது வழக்கம். சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதி இடையே திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்குள்ள வனவிலங்குகள் இரவில் ரோட்டை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாடிக் கொண்டு இருந்ததை வாகன ஒட்டி ஒருவர் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டது வைரலாகி உள்ளது.
Next Story