செல்லியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சம்!

செல்லியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூபாய் 7 லட்சம் வசூலாகியுள்ளது.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 4 மாதங்களுக்கு பின்னர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், கோவில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கோவிலில் இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் தன்னார்வலர்கள், பக்தர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். காணிக்கை எண்ணும் பணி இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.காணிக்கையாக ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்து 271 மற்றும் 22 கிராம் தங்கம், 92 கிராம் வெள்ளியை பக்தர்கள் செலுத்தியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story