செல்லியம்மன் கோயில் தீமிதி திருவிழா

செல்லியம்மன் கோயில் தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே செல்லியம்மன் ஆலய தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பொரும்பூர் ஊராட்சியில் மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் தீமிதி உற்சவம் கடந்த 13-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமி திருவீதியுலா காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது‌ . முக்கிய நிகழ்வாக தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அடுத்து வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதம் இருந்த பக்தர்கள் மற்றும் கூண்டு காவடிகள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பிரம்மாண்டமாக நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story