செங்கல்பட்டு ஸ்ரீ கிருபாநாயகி, ஸ்ரீ பசுபதிநாதா் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஸ்ரீ கிருபாநாயகி, ஸ்ரீ பசுபதிநாதா் கோயில் கும்பாபிஷேகம்


செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகரில் உள்ள ஸ்ரீ கிருபாநாயகி, ஸ்ரீ பசுபதிநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகரில் உள்ள ஸ்ரீ கிருபாநாயகி, ஸ்ரீ பசுபதிநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகரில் உள்ள ஸ்ரீ கிருபாநாயகி உடனுறை ஸ்ரீ பசுபதிநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழைமையான ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் வளாகத்தில் விநாயகா் சந்நிதி, முருகா் வள்ளி தெய்வானை சந்நிதி, துா்க்கை அம்மன் சந்நிதி, பெருமாள் சந்நிதி, தாயாா் சந்நிதி, ஆஞ்சநேயா் சந்நிதி என தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

இக்கோயிலில் சிவனுக்கான சந்நிதியை கட்ட வேண்டும் என கோயில் நிா்வாகிகள் விழா குழுவினா் முடிவு எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவன் சந்நிதியும் அம்பாள் சந்நிதியும் கட்டும் பணி தொடங்கியது. திருப்பணி நிறைவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்கள் புறப்பாடு அனைத்து விமான கோபுரங்களுக்கும் செங்கல்பட்டு சிவஸ்ரீ எஸ் குமாா் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியா்கள், ஊராட்சித் தலைவா்கள், உறுப்பினா்கள், முக்கிய பிரமுகா் பக்தா்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story