செங்கல்பட்டு கலெக்டர் வளாகம் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிப்பு

செங்கல்பட்டு கலெக்டர் வளாகம் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிப்பு


செங்கல்பட்டு கலெக்டர் வளாகம் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் அங்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்


செங்கல்பட்டு கலெக்டர் வளாகம் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் அங்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்

செங்கல்பட்டு அடுத்த, ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம், வேதநாராயணபுரம் பகுதியில், புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு, கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட, அனைத்து துறை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகம் நான்கு தளங்களை உடையது. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இதுமட்டுமின்றி, திங்கட்கிழமை தோறும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள், கலெக்டர் நுழைவாயில் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், கலெக்டர் அலுவலகம் வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, கலெக்டர் அலுவலத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு, தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story