காஞ்சிபுரத்தில் களம் இறங்கும் செங்கை மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகி

காஞ்சிபுரத்தில் களம் இறங்கும் செங்கை மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகி

ராஜசேகர்

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக செங்கல்பட்டு அம்மா பேரவை துணை செயலர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க., சார்பில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய ஆறு இடங்களில் உள்ள ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகளில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், செலவு செய்வதில் ஏற்பட்ட தயக்கம் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் உள்ள உட்கட்சி பூசல் போன்ற காரணங்களால் பலரது பெயர்களும் கைவிடப்பட்டன. இறுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் புனித தோமையார் மலை ஒன்றியத்தில் உள்ள பெரும்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி தலைவரும், அ.தி.மு.க.,வின் அம்மா பேரவை துணை செயலருமான பெரும்பாக்கம் ராஜசேகர் என்பவரை நிறுத்த மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து அவர் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

Tags

Next Story