செங்கல்பட்டு குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு குறைதீா் கூட்டம்

குறைதீர்வு கூட்டம்

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 237 மனுக்கள் பெறப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 237 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோா் ஓய்வூதியம் மற்றும் விதவை ஓய்வூதியம் பெறும் 10 பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கான வேட்டி-சேலைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநா்கள், சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்க, வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் பொருட்டு, தலா ரூ.1 லட்சம் மானிய தொகையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) லலிதா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாகிதா பா்வின், மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெற்றிகுமாா், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story