செங்கல்பட்டு : நல திட்ட உதவிகள் வழங்கும் விழா
நல திட்ட உதவிகள் வழங்கும் விழா
செங்கல்பட்டு மாவட்டம், புக்கத்துறையில் மனித உரிமைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு சார்பில்,சர்வ தேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு அரிசி, காய்கறி, மாணவ மாணவகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்த அமைப்பின் சார்பாக சாலையோரம் இருப்பவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் சுரேஷ்,மாநில பொருளாளர் சாய் அரவிந்த்,மாநில கெளரவ தலைவர் சக்திகுமார், தேவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சொருபராணி எழிலரசு துணைத் தலைவர் சித்ரா வெங்கடேசன் மற்றும் மணல் லாரி உயமையாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சிங்கை கணேஷ், மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு முக்கிய நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.