சென்னை: 16 சட்டமன்ற தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: 16 சட்டமன்ற தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 39,01,167 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன். வெளியிட்டார்.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம் 39,01,167 உள்ளது இதில் 19,17,135 ஆண் வாக்காளர்களும் 19,82,875 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 1157 உள்ளனர் இதில் புதிதாக 32,662 ஆண் வாக்காளர்களும் 36,111 பெண் வாக்காளர்களும் 50 மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது மொத்தம் 68,823 வாக்காளர்கள் பெயர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது இதில் 17,399 ஆண் வாக்காளர்கள் 18,423 பெண் வாக்காளர்கள் 12 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 35,834 வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது

Tags

Next Story