சென்னை புத்தக கண்காட்சி நிறைவு

சென்னை புத்தக கண்காட்சி நிறைவு

புத்தக காட்சி 

சென்னை நந்தனம் ஒய்எம்சி ஏ மைதானத்தில் நடைபெற்ற 47 ஆவது புத்தக காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் ரூ.10 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி ஜனவரி மூன்றாம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. ஜனவரி 8 ஆம் தேதி சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக அன்று ஒரு நாள் தவிர மொத்தம் 18 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெற்றது.

இந்தாண்டு புத்தகக் காட்சியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றன. குறிப்பாக, அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 600 பதிப்பகங்களின் புத்தகங்களின் இடம் பெற்றுள்ளன. மொத்தமாக 47 ஆவது புத்தக காட்சிக்கு இதுவரை 8 லட்சம் வாசகர்கள் வருகை.ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை 10 கோடி ரூபாய் வரையான புத்தகங்கள் விற்பனை. இந்த ஆண்டு நூற்றாண்டு கண்ட பதிப்பகங்கள் 3 கும் , 50 ஆண்டு பதிப்பாளர்கள் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. 150 க்கும் மேற்பட்ட பபாசி உறுப்பினரல்லாதவர்களுக்கு அரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த முறை திருநங்கைகளுக்கான இரு சிறப்பு அரங்குகள். பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் பெருமளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பூம்புகார் சார்பில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் 2000 சதுர அடியில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் மேடை பேச்சுகள் இடம்பெற்றன. இந்த ஆண்டு குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகப்படியான விற்பனையாகி இருக்கின்றன . 50 ஆயிரம் குழந்தைகள் 47 வது புத்தகக் காட்சிக்கு வருகை தந்திருக்கின்றனர்.

Tags

Next Story