சென்னை சென்ட்ரல் - விமான நிலைய மெட்ரோ ரயில் ரத்து

சென்னை சென்ட்ரல் - விமான நிலைய மெட்ரோ ரயில் ரத்து

பைல் படம் 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் நேரடி மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று பச்சை வழித்தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை நீல பாதையும், சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான பச்சை பாதையும் வழக்கம் போல் இயங்குகிறது.

Tags

Next Story