சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மானியக்கோரிக்கை ஆய்வுக் கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
2024- 2025 ஆண்டிற்கான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இன்று (12.06.2024) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் 2024-2025ஆம் ஆண்டிற்கான சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா , சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story