புன்னை மர சேவையில் எழுந்தருளிய சென்னகேசவப்பெருமாள்
புன்னை மர சேவையில் எழுந்தருளிய சென்னகேசவப்பெருமாள்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைதேர்திருவிழா 6வது நாளையொட்டி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உற்சவமூர்த்திக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் புன்னை மர சேவை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சென்னகேச பெருமாளை வழிபாடு செய்தனர். சித்திரைத் தேர்திருவிழா 6வது நாளையொட்டி மலையடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள், ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சென்னசேகவப்பெருமாள் சுவாமி புன்னை மர சேவையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இச்சேவையில் சுவாமிக்கு தேங்காய், பழங்களை படைத்து வழிபட்ட பக்தர்களுக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இலவசமாக பல்வேறு மளிகை பொருட்கள் மேலும் கேசரி, புளியோதரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு சுவாமி ராஜஅலங்காரத்தில் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். ஏப்ரல். 21 ஆம் நாள் மாலை சுவாமி தங்கு மண்டபத்தில் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு திருக்கல்யண வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.