காசோலை மோசடி வழக்கு:நீதிமன்றம் உத்தரவு

காசோலை மோசடி வழக்கு:நீதிமன்றம் உத்தரவு

காசோலை மோசடி வழக்கு, விவசாயிக்கு இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் , ஆசிரியருக்கு சிறைதண்டனை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


காசோலை மோசடி வழக்கு, விவசாயிக்கு இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் , ஆசிரியருக்கு சிறைதண்டனை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெரம்பலூரில் காசோலை மோசடி வழக்கில் விவசாயிக்குரூ.3லட்சம் இழப்பீட்டு தொகை வழங்காவிட்டால் , ஆசிரியருக்கு 6மாதம் சிறைதண்டனை, குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. பெரம்பலூர் அடுத்த நொச்சியம் கிராமம், தெற்குத்தெருவில் வசிப்பவர் மருதநாயகம், இவரது மகன் ராபர்ட் இங்கர்சால் வயது48, விவசாயி. இவருக்கும் எறையூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் வயது. 54 என்பவருக்கும் நட்பு இருந்துள்ளது. கணேசன் ஏற்காடு செம்மநத்தம் பகுதியில் மலைவாழ் உண்டுஉறைவிட பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். கணேசன், நட்பின் அடிப்படையில் தனது குடும்ப செலவிற்காக ராபர்ட் இங்கர்சாலிடம் இருந்து 2021 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.3லட்சம் ரொக்கம் பெற்றிருந்தார். ஆனால் பலமாதங்கள் ஆகியும் கணேசன், ராபர்ட் இங்கர்சாலிடம் பணத்தை திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக ராபர்ட் இங்கர்சால் கணேசனிடம், முறையிட்டபோது, தனது சேமிப்புகணக்கில் இருந்து ரூ.3லட்சத்திற்கு காசோலையை ராபர்ட் இங்கர்சாலுக்கு கணேசன் கொடுத்தார்.

அந்த காசோலையை ராபர்ட் இங்கர்சால் தனது வங்கி கணக்குமூலம் செலுத்தியபோது 30.9.2022 அன்று காசோலை திரும்பி வந்துவிட்டது. இதுதொடர்பாக கணேசனிடம் பலமுறை முறையிட்டும், காசோலைக்குரிய பணத்தை அவர் ராபர்ட் இங்கர்சாலுக்கு திருப்பி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ராபர்ட் இங்கர்சால், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கணேசன் மீது தனது வழக்கறிஞர் மூலம் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்புலட்சுமி, ஆசிரியர் கணேசன், மனுதாரர் இங்கர்சாலுக்கு, இழப்பீட்டு தொகையாக ரூ.3லட்சத்தை தீர்ப்பு கூறிய தேதியில் இருந்து 2மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 6மாதம் சிறைதண்டணை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story