பள்ளி மாணவ,மாணவிகளுக்கான சதுரங்க போட்டி.

தாராபுரம் அருகே குடியரசு தினத்தையொட்டி தாலுக்கா அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குடியரசு தின விழாவை யொட்டி தாலுகா அளவில் பள்ளி-மாணவ-மாணவிகளுக்கான செஸ் (சதுரங்கம்) போட்டி ராமமூர்த்திநகர் இந்திரா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. இந்த போட்டியை பள்ளி தலைமை ஒருங்கிணைப்பாளர் அம்மலி பிரியதர்ஷினி. ஆசிரியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக செல்வா ஸ்வீட்ஸ் காளிதாஸ், வழக்கறிஞர் சிவகுமார். காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார், பள்ளி முதல்வர் வேங்கையன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டனர்.

5-சுற்றுக்களாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் 6, 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள்- மற்றும் பொது பிரிவினர் என தனித்தனியாக நடத்தப்பட்ட செஸ் போட்டியில் முதல் 3 இடம் பிடித்த செல்வகுமார், ஹரிபிரசாத், பத்மப்பிரியன், ஆகியோருக்கு பதக்கம் சான்றிதழ் நினைவு கோப்பை ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் பி.பி. சிவா மற்றும் இளங்கோ மற்றும் ஆசிரியர்கள் வழங்கினர்.மேலும் சதுரங்க போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் பொது பிரிவில் பங்குபெற்ற நபர்களுக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் தாராபுரம் தாலுகா பகுதியிலிருந்து 200க்கும் மேற்பட்ட சதுரங்க போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story