தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு சதுரங்க போட்டி

தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு சதுரங்க போட்டி

சதுரங்க போட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு செந்துறையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் செந்துறை நகரிலுள்ள அரசு மேல்நிலைபள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைப்பெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிபடுத்தினர். இதில் ஆண்கள் பிரிவில் லட்சுமணன், வீரசேகர், அருண் ஆகிய 3 பேரும், பெண்கள் பிரிவில் பிரியஞ்சனா, யுவந்திகா, ஜெயதாரணி ஆகிய 3 பேரும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்டனர். இந்நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன், செந்துறை ஊராட்சிமன்ற தலைவர் செல்லம்கடம்பன் பரிசுகளை வழங்கினர்.

Tags

Next Story