செட்டிகுளம் மருதிருவர் மக்கள் நல சங்க துவக்க விழா
மருதிருவர் மக்கள் நல சங்க துவக்க விழா
செட்டிகுளம் மருதிருவர் மக்கள் நல சங்க துவக்க விழாவில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் செட்டிகுளம் மருதிருவர் மக்கள் நல சங்கம் துவக்க விழா வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் மருதிருவர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து நல சங்க நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆறுமுகம் மதுரை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யாராஜவேல், பாண்டியன் ,முருகன், கலைவாணி உட்பட நல சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story