தேர்தல் பணியாற்றிய அலுவலர்களுக்கு கமகம சிக்கன் பிரியாணி விருந்து

காஞ்சிபுரத்தில் தேர்தல் காலங்களில் தூய்மை பணியை திறம்பட செய்த பணியாளர்களுக்கு, சான்றிதழ் வழங்கி, பிரியாணி விருந்து வைத்து வருவாய் கோட்டாட்சியர் அசத்தினார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில், நாடாளுமன்றத் தேர்தல் பணிபுரிந்த மண்டல தேர்தல் அலுவலர் முதல் தூய்மை பணியாளர் வரை அனைவரின் பாராட்டி பிரியாணி விருந்து அளித்த வருவாய் கோட்டாட்சியர் செயல் அரசு அலுவலர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த இரண்டு மாத காலமாகவே நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து, தேர்தல் பணிகளை அரசு அலுவலர்கள் துவக்கினர். அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உதவி தேர்தல் அலுவலராக வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி செயல்பட்டார்

.காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளையும் பணியாற்றும் மண்டல தேர்தல் அலுவலர் முதல் தூய்மை பணியாளர் வரை அவ்வப்போது தேவையான அறிவுரைகளை வழங்கி வந்தார்.கடந்த நான்காம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவுற்ற பின்பும் , தூய்மைப் பணி முதல் வாக்கு பதிவு இயந்திரங்களை ஒப்படைக்கும் வரை சிறப்பாக செயல்பட்டு எந்தவித சச்சரவுக்கும் துளியும் இடமில்லாமல் சிறப்பாக காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயல்பட்டது.இந்நிலையில் இதற்கு பெரிதும் உதவி செய்த மண்டல தேர்தல் அலுவலர் முதல் தூய்மை பணியாளர் வரை அனைவரையும் இன்று வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி பாராட்டும் வகையில் தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தினார்.

இதில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகிய இரு தினங்களிலும் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் பணியாற்றிய வருவாய்த் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் தேர்தல் பணி காலங்களில் செயல்பட்ட விதம் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பணியாளர்களை அழைத்து பாராட்டிய நிகழ்வு அனைத்து அலுவலகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதன் விரிவாக அனைத்து ஊழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அறுசுவை உணவாக சிக்கன் பிரியாணி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட அசைவ உணவு பொருள்களுடன் உணவு வழங்கப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்களைப் பாராட்டியதை மன மகிழ்ந்து, உதவி தேர்தல் அலுவலரையும் பாராட்டினர்.

Tags

Next Story