சிதம்பரம் மக்களவைத் தொகுதி:அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் மக்களவைத் தொகுதி:அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா.சந்திரஹாசன் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.

அரியலூர் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா.சந்திரஹாசன் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவை சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான பாண்டியன், தேமுதிக மாவட்டச் செயலர் ராமஜெயவேல்,எஸ்.டி.பி.ஐ மாவட்டச் செயலர் ஜாகீர்உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் சந்திரஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் வெற்றிப்பெறால் ஜெயங்கொண்டம், அரியலூர் வழியாக சிதம்பரம் சேலம் ரயில் பாதை திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுப்பேன். சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். பருத்தி மற்றும் வகையில் பஞ்ச் தொழில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். வெள்ளாறு, மருதையாறு, கொள்ளிடம் ஆகிய மூன்று ஆறுகளையும் இணைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். முன்னதாக அவர், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், காமராஜர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story