பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி சிதம்பரம்

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை தொகுதியில் வெற்றிபெற்ற கார்த்தி சிதம்பரம் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தன்னை தேர்ந்தெடுத்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில் பொதுமக்களின் எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னிடம் நேரில் தகவல் கொடுங்கள் நான் என்ன காரியமாக இருந்தாலும் சரி அனைத்து காரியங்களையும் உங்களுக்கு செய்து தருவேன்.

புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுக்கோட்டை தஞ்சாவூர் ரயில்வே பாதை அமைப்பதற்கு பலமுறை வலியுறுத்தி உள்ளேன். மீண்டும் வலியுறுத்துவேன். அதேபோல் காவேரி வைகை குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை அதை பெற்று தர முயற்சிப்பேன் என அவர் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story