தரையில் மண்டியிட்டு பூமாதேவியை வணங்கி வாக்கு சேகரித்த பிஜேபி வேட்பாளர்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கார்த்தியாயினி ஜெயங்கொண்டத்தில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .ஜெயங்கொண்ட நகரில் நடைபெற்ற இறுதி கட்டப் பிரச்சாரத்தில் அவர் பேசும்போது எனக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள் அனைத்து கிராமங்களும் 40 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது. நகரங்கள் அனைத்தும் நரகமாக உள்ளது ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை வளர்ச்சியும் இல்லை தற்போது எம்பி யாக இருப்பவரின் கிராமத்திற்கு கூட சாலை வசதி இல்லை மண்சாலையாக உள்ளது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை ஆட்டு மந்தை கூட்டத்திற்கு காசை கொடுத்தால் ஓட்டு பெற்றிடலாம் என திராவிட கட்சிகள் நினைக்கிறது ரூ200,500 வாழ்க்கைக்கு போதுமா நம்மால் ஒரு நாளில் சம்பாதிக்க முடியாதா என கேள்வி எழுப்பினர்.
சமுதாயத்தில் மாற்றம் மற்றும் வளர்ச்சி தேவைப்படுகிறது தமிழகம் முன்னேற்றம் இல்லாமல் திராவிட கட்சிகளால் தடுக்கப்படுகிறது. தாமரைக்கு வாக்களித்தால் உங்களுக்காக பேசுவேன் மக்கள் முன்னேற வேண்டும் மாற்றத்தை தாருங்கள் முன்னேற்றத்தை கொடுக்கிறேன் திரும்பத் திரும்ப பொய் மூட்டைகளை அவிழ்த்து ஊழல் செய்வதற்கு நவீன முறைகளை தேடிக் கொண்டு வருகிறார்கள் எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் நான் நிறைய படித்துள்ளேன்.
நான் எங்கு வேண்டுமென்றாலும் வேலைக்கு செல்லலாம் ஆனால் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக தான் தேர்தலில் நிற்கிறேன் தெய்வமாக வணங்கி கேட்டுக்கொள்கிறேன் திரும்பத் திரும்ப திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள் அனைத்து மக்களுக்கும் மாற்றத்தை தருவேன் உங்கள் சகோதரியாக உங்களுக்கு சேவை செய்ய மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் பொய் வாக்குறுதிகளை நம்பாதீர்கள். சதிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் உங்கள் குரலாக நாடாளுமன்றத்தை ஒலித்து சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் என கண் கலங்கி பேசிய வேட்பாளர் கார்த்தியாயினி திடீரென தரையில் மண்டியிட்டு பூமித்தாயை வணங்கினார் இது அங்கிருந்த மக்களிடையே கண் கலங்கச் செய்தது இறுதி கட்ட பிரச்சாரத்தில் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரதிநிதிகள் தொண்டர்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்