ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சிதம்பரம் எம்எல்ஏ அழைப்பு
எம்.எல்.ஏ பாண்டியன்
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சிதம்பரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கலந்துகொள்ள எம்.எல்.ஏ பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்லாவரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மருமகள் மார்லினா தம்பதியினர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த பட்டியில பெண் செல்வி அவர்களிடம் 18 வயதான அவரது மகளை மருத்துவப் படிப்பு படிக்க வைக்கின்றேன் என்று கூறி அழைத்துவந்து வீட்டு வேலை வாங்கியதுடன் அப்பெண்ணை கடுமையாக தாக்கியதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திடவும், அவர்கள் மீது வன்கொடுகை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்திட வலியுருத்தி தி. மு. க அரசை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற உள்ளது. ஆர்பாட்டத்தில் தலைமை அதிமுக கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story