சிதம்பரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

சிதம்பரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

அறிமுகக் கூட்டம்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அரியலூர் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து, வேட்பாளர் சந்திரஹாசனை அறிமுகம் செய்து வைத்து, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். முன்னதாக வேட்பாளர் சந்திரஹாசன், தேமுதிக மாவட்டச் செயலர் ராமஜெயலிங்கத்தை சந்தித்து ஆதரவு கோரினார். கூட்டத்தில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 25 பேர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவரும், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன்,நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் பிரேம்குமார், மாவட்ட அண்ணா தொழிற் சங்கச் செயலர் கல்லங்குறிச்சி பாஸ்கர், அதிமுக ஒன்றியச் செயலர்கள் செல்வராஜ், பாலசுப்ரமணியன், வழக்குரைஞர் பிரிவு சுகுமார், மகளிரணிச் செயலர் ஜீவா அரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story