முதல்வர் பிறந்த நாள்: பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வர் பிறந்த நாள்:  பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தங்க மோதிரம் வழங்கல்

முதல்வர் பிறந்த நாளை ஒட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழங்கினார்.

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த நாளை ஒட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில் மார்ச் ஒன்றாம் தேதி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்த திருச்செங்கோடு புது முகமதியர் தெருவை சேர்ந்த முன்னிமா (29),முகமது மன்னன்,

தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை ராசிபுரம் மலையம்பாளையத்தை சேர்ந்த திவ்யா (29) உதயகுமார் தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தைஎன இரண்டு ஆண் குழந்தைகளுக்குமாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆனந்த் குமார், பி.எஸ். சீனிவாசன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மண்டல நகரமைப்பு திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில் ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ்,

எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய குழு துணை தலைவர் திருச்செங்கோடு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ராஜபாண்டி ராஜவேல், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story