திண்டிவனம்-மரக்காணம் இருவழி சாலை விரிவாக்க பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு
பணிகளை ஆய்வு செய்த தலைமை பொறியாளர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - மரக்காணம் சாலை இரு வழி சாலையில் இருந்து நான்கு வழி சாலையாக 32 .00 கிலோமீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தும் பணி முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் இருந்து 238.00 கோடிக்கு ஒப்பந்தம் செய்லாக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்பணியை சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார், இதில் மரக்காணம் பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாயில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் மேல் தளம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.ஆய்வின்போது பணிகளை துரிதப்படுத்தி பருவ காலத்திற்கு முன்பு முடிக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார், இந்த ஆய்வில் கண்காணிப்பு பொறியாளர் சத்யபிரகாஷ்,கோட்ட பொறியாளர் சிவசேனா,
உதவி கோட்ட பொறியாளர் கவிதா, தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் மகேஷ், உதவி பொறியாளர் தீனதயாளன் மற்றும் இளநிலை பொறியாளர் ராமு மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.