நாகையில் மக்களுடன் முதல்வர் தொடக்கம்
முகாமில் பங்கேற்றவர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தை கோயமுத்தூரில் தொடங்கி வைத்தார். இதை எடுத்து நாகை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நாகை ஜானின் டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் எம். கௌதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், நாகை நகர் மன்ற தலைவர் இரா மாரிமுத்து, துணைத்தலைவர் எம்.ஆர். செந்தில்குமார்,
மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் | மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் சாதி சான்று, பிறப்பிடச் சான்று, வருமானச் சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று. ஆதரவற்ற பெண் சான்றிதழ் , குடிபெயர்ப்பு சான்று வேலையில்லா பட்டதாரி சான்றிதழ் சான்றிதழ் கலப்பு திருமண சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ், சிறு குறு விவசாயிகள் சான்றிதழ்,
ஆண் வாரிசு இல்லை சான்றிதழ், திருமணம் ஆகவில்லை என சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால்தொலைத்தமைக்கான சான்றிதழ், இந்திரா காந்தி முதியோர் ஓய்வு திட்டம், ஆதரவற்ற விதவை நிதி உதவி திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை திட்டம், ஈவேரா மணியம்மையார் விதவை மகள் திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவி திட்டம், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் , அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதி உதவி திட்டம், பட்டா மாறுதல், அடகு கடை உரிமை மற்றும் வட்டிக்கு கடன் கொடுப்போர் உரிமை பெற விண்ணப்பித்தல்,காவல் துறை சார்பில் பொருளாதார குற்றங்கள்,நில அபகரிப்பு மோசடி, வரதட்சனை மற்றும் இதர உள்ளிட்டவற்றிற்கு ஆன்லையனில் பதிவு செய்யப்பட்டது