மக்களுடன் முதல்வர் முகாம் - மனுக்கள் மீது நடவடிக்கை - எம்.பி தகவல்.

மக்களுடன் முதல்வர் முகாம் - மனுக்கள் மீது நடவடிக்கை - எம்.பி தகவல்.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் 4,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை - இராஜேஸ்குமார் எம்.பி தகவல்.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் 4,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை - இராஜேஸ்குமார் எம்.பி தகவல்.

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோகனூர் பேரூராட்சி, முத்துராஜா தெரு, மாசடச்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை நடைபெற்றது. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது, நாமக்கல் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 29.12.2023 இன்று வரை 10 நாட்களில் 13 அரசுத்துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு 39 முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், பல்வேறு சேவைகள் பெறும் வகையில் பொதுமக்களால் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் விரைவில் பரிசீலினை செய்யப்பட்டு அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட தகுதியான நபர்களுக்கு தேவையான அரசின் சேவைகள் உடனடியாக வழங்கப்படும். மேலும், கடந்த 18.12.2023 முதல் 29.12.2023 இன்று வரை நடைபெற்ற 39 முகாம்களில் பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று சிறப்பாக சேவை புரிந்த அனைத்து அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் குடிநீர் தேவையை அடிப்படை தேவையாக கருதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி மோகனூர் பேரூராட்சிக்கு புதியதாக மல்லம்பாளையம் என்ற இடத்தில் 3 எண்ணிக்கையிலான நீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பகிர்மான குழாய்கள் புதியதாக அமைத்து காவிரி கரையில் அமைந்துள்ள மோகனூர் பேரூராட்சி பகுதிகளுக்கு சீராக குடிநீர் விநியோகம் வழங்கும் வகையில் ரூ.22.77 கோடி மதிப்பீட்டில் பணிகள் விரைந்து தொடங்கப்பட்டு நடைபெறவுள்ளது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் தெரிவித்தார்.இம்முகாம்களில் அட்மா குழு தலைவர் நவலடி, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story