அர்ச்சகர் குடியிருப்பு காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர்

அர்ச்சகர் குடியிருப்பு காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர்

நாகர்கோவிலில் அர்ச்சர் குடியிருப்பு கட்டிடத்தை காணொளி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


நாகர்கோவிலில் அர்ச்சர் குடியிருப்பு கட்டிடத்தை காணொளி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி கோயில் அருகே அர்ச்சர்கள் குடியிருப்பு கட்ட சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி கிருஷ்ணர் கோவில் தெப்பக்குளம் அருகே ரூபாய் 61 லட்சம் செலவில் அர்ச்சர்கள் குடியிருப்பு கட்டப்பட்டது. இதை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதை அடுத்து அங்கு தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் மகேஷ் குத்து விளக்கு ஏற்றினார். அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தற்போது திறக்கப்பட்டுள்ள அர்ச்சகர் குடியிருப்பில் நான்கு வீடுகள் உள்ளன. அனைத்து வசதியுடன் இந்த குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மேயர் மகேஷ் கூறினார்.

Tags

Next Story