திருச்சியில் கருணாநிதிக்கு சிலை-காணொளி மூலம் திறந்து வைக்கும் முதல்வர்

திருச்சியில் கருணாநிதிக்கு சிலை-காணொளி மூலம் திறந்து வைக்கும்  முதல்வர்

கருணாநிதி சிலை

திருச்சியில் கருணாநிதிக்கு சிலையை காணொளி மூலம் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

முன்னாள் முதல்வர் மற்றும் முத்தமிழறிஞர், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு வருட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது .

அதன்படி, 76வது நிகழ்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாளை (25.01.2024) வியாழக்கிழமை காலை 8 மணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். விழாவுக்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலை வகிக்கிறார். இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட ,வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story