குமாரபாளையத்தில் போலீஸ் குடியிருப்பை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைப்பு

குமாரபாளையத்தில் போலீஸ் குடியிருப்பை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைப்பு

முதல்வர் திறந்து வைத்த காவலர் குடியிருப்பு

குமாரபாளையத்தில் போலீஸ் குடியிருப்பை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசாருக்கு காவலர் குடியிருப்பு கட்ட, பல இடங்களில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டது.

இறுதியாக எஸ்.எஸ்.எம். பொறியியியல் கல்லூரி பின்புறம் அதற்கான இடம் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணி துவங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதனை சில நாட்கள் முன்பு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் டி.ஜி.பி. விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. ஏ.டி.எஸ்.பி. கங்கேஸ்வரி தலைமை வகித்தார். இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: 408.97 லட்சங்கள் மதிப்பில் குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்பு கட்டுமான பணி நிறைவு பெற்றதையடுத்து, 32 வீடுகளில், தரை தளம், மின் இணைப்பு பணிகள், குழாய்கள் அமைத்த பணிகள், குடிநீர் டேங்க்குகள் பொருத்திய பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் டி.ஜி.பி. விஸ்வநாதன் ஏற்கனவே ஆய்வு செய்தார்.

நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். குடியிருப்பு பகுதி முழுதும் சுற்றி, சுற்றிசுவர் அமைக்க கட்டுமான ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். தற்போது தமிழக முதல்வர் காவலர் குடியிருப்பை திறந்து வைத்துள்ளார். மிக்க நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story