கன்னியாகுமரி கடற்கரையில் சூழியல் பூங்கா அமைக்க அறிவிப்பு !

கன்னியாகுமரி கடற்கரையில் சூழியல் பூங்கா அமைக்க அறிவிப்பு !
கன்னியாகுமரியில் சூழியல் பூங்கா அமையும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர்
கோவளம் ஊராட்சிக்குள்பட்ட கடற்கரைப் பகுதியில் சூழியல் பூங்கா, தோட்டம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்த நிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத் துறை சாா்பில் கோவளம் ஊராட்சிக்குள்பட்ட கடற்கரைப் பகுதியில் சூழியல் பூங்கா, தோட்டம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். இதையடுத்து, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநரிடம் திட்ட அறிக்கை சமா்ப்பிக்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாவட்ட வருவாய்த் துறை சாா்பில் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பூங்கா அமையவுள்ள இடத்தை அமைச்சா் மனோ தங்கராஜ், மேயா் ஆா். மகேஷ், அதிகாரிகளுடன் சென்று நேற்று பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறும்போது, வருவாய்த் துறை தயாரிக்கும் அறிக்கையை முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று, சூழலியல் பூங்கா, தோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றாா். தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷீலா ஜாண், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story