வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வெள்ள தடுப்புப் பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நீர்வளத்துறை சார்பில் திருச்செந்தூர் வட்டம் புன்னக்காயல் கிராமத்தில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ரூ.46.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடை மடை தடுப்பணைகள், ஏரல் வட்டம் கடம்பா குளத்தின் மிகுதி வழிந்தோடி மற்றும் மருதூர் மேலக்காலில் ரூ.34.61 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற வெள்ள தடுப்புப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், தென் மாவட்டங்களில் டிசம்பர் 2023-ல் பெய்த அதீத கனமழையின் காரணமாக நீர்வளத்துறையின் ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் அணைக்கட்டுகளில் ஏற்பட்ட சேதங்களை ரூ.280 கோடி மதிப்பீட்டில் நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளை தொடங்கி முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிநிகழ்வை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பார்வையிட்டார். இந்நகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளர்கள் சிவக்குமார், தயாளகுமார், செயற்பொறியாளர்கள் மாரியப்பன், வசந்தி, மலர்விழி, உதவி செயற்பொறியாளர்கள் ஆதிமூலம், சுபாஷ், முருகன், உதவி பொறியாளர் ரமேஷ் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story